கேகாலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், டென்மார்க் Herning, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கொன்றட் பிரான்சிஸ் செபஸ்தியாம்பிள்ளை அவர்களின் நன்றி நவிலலும்.
அன்பின் சிகரமே
வாழ்வின் ஒளிவிளக்கே
எம் குடும்பத்தலைவனே!
எம் வாழ்வின் வழிகாட்டிய தீபமே!
காற்றிலே கலந்து நாட்கள் 31 ஆனாலும்
காலடி தழைக்கும் உம் நினைவுகள்
எம் மனத்திரையினுள்ளே
முழையரும்பி கொடியாய்
மலர்ந்து மணம் வீசியபடி இன்னும்
தோளிலே தெளித்த பாசத்தூறல்கள்
வாழ்வில் ஆயிரமாயிரம் கண்கள் ஓரம்
கண்ணீர் துளிகளாய்
உம் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
எம் அன்பு ஐயாவே!
உம் இழப்பால் எம் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.