
யாழ். தென்மராட்சி உசன் கந்தசுவாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை சின்னத்துரை அவர்கள் 17-07-2023 திங்கட்கிழமை அன்று முருகனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி(பரமேஸ்) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, வினாசித்தம்பி, சின்னம்மா, சிவகுரு, நல்லதம்பி, திருப்பதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிரஞ்சலா(லண்டன்), கிருபராஜா(கிருபா- கனடா), கோகுலறாஜ்(செந்தூர்- லண்டன்), நிருபனா(நிரு- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சுதாகரன்(நிசாந்தன்), பாலதர்ஷினி(கனடா), காயத்ரி(லண்டன்), சுதாகர்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அஷ்ணவி(லண்டன்), லவீனா(கனடா), லக்ஷனா(கனடா), கேஷிகா(லண்டன்), அபிமன்யு(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற விநாசித்தம்பி, சரஸ்வதி(இலங்கை), காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், சிவபாக்கியம், மற்றும் விசாலாட்சி(இலங்கை), காலஞ்சென்ற சுந்தரம், தட்சணாமூர்த்தி- மனோன்மணி(கனடா), சிவராசா- விமலாம்பிகை(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஈச்சங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details