திதி:13/08/2024.
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை பெரேரா லேனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னையா வேலும்மயிலும் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் மூன்று சென்றதென்ன
எம்மை விட்டு போக
உங்களுக்கு எப்படி மனசு வந்தது
வலியின் வேதனையில்
புலம்பி தவிக்கின்றோம் இன்று!
அன்பும் பாசமும் ஊட்டி
எங்களை பண்பாக பாரினிலே
நேசத்துடன் வளர்த்தீர்களே,
கண்ணுக்குள் இருக்கும்
கண் இமை போல் எம்மை காத்து வந்தீர்களே!
உங்கள் கடமைகளை நேர்மையுடனும்,
பொறுமையுடனும் செய்து வந்தீர்களே
இன்று எல்லா பொறுப்புக்களை முடித்து விட்டேன்
என்ற பெருமையுடன்
எம்மை தவிக்க விட்டு சென்றீர்களே அப்பா!
அறிவுரை சொல்லவோ
புத்திமதி சொல்லவோ
எமக்கு நீங்கள் இன்றி தவிக்கின்றோம்,
எது நன்மை தீமை என்று சொல்ல
நீங்கள் இல்லையே!
எமக்காக ஒரு முறை வாருங்கள் அப்பா!
உங்களை நினைத்து இந்த
உலகத்தில் தேடுகின்றோம் அப்பா!
எம் இதயம் தொட்ட எம் அன்பு அப்பாவே!
உங்கள் நினைவு நிழலாய் தொடரும் எம்முடன்..!
ஆண்டுகள் மூன்று சென்றாலும் என்றும் எங்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கும் வேலும்மயிலும் மாமாவின் ஆத்மாசாந்தியடைய பிரார்த்திக்கிறோம்