GENGA N SRIGENGATHARAN ON BEHALAF OF MAHAJANA COLLEGE OSA UK 'அப்பாசி மாமா' என்று அழைக்கப்பட்ட பன்னாலை சின்னையா சிவசுப்ரமணியம் அவர்கள் நேற்றிரவு லண்டனில் காலமானார் என்ற செய்தியை கனதியான மனதுடன் உங்களுக்கு தெரியத்தருகிறேன். மகாஜனாவின் பழைய மாணவர். இங்கு பழைய மாணவர் சங்கத்தை தொடங்கியதில் இருந்து நிர்வாகத்தில் செயற்பட்டவர். நல்ல நாடக நடிகர். ஆரம்ப காலங்களில் தனி மனிதனாகவும் மனோகரன் மாஸ்டருடன் இணைந்தும் நாடகங்கள் தயாரித்து சங்கத்தின் ஊடாக மகாஜன கல்லூரிக்கு நிறைய பண உதவி செய்தவர். குறிப்பு: இன்றைய தலைமுறைக்கு தெரிவதற்கு மகாஜன கல்லூரியின் பின் அமைக்கப்பட்டிருக்கும் மூன்றடுக்கு கட்டிடத்தை அமைத்த KEN BALENDRA இவருடைய Cousin. இவரின் அக்காவின் மகன் உதைபந்தாட்ட வீரன் சீனி என்று அழைக்கப்படும் சிவஞானம் (1965- 70) இவரின் அக்கா மகன். அவரை இழந்து தவிக்கும் மனைவிக்கும் பிள்ளைகளிற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்