Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 APR 1938
இறப்பு 07 MAY 2021
அமரர் சின்னையா சிவசுப்பிரமணியம் (Appasi, Sam)
வயது 83
அமரர் சின்னையா சிவசுப்பிரமணியம் 1938 - 2021 Tellippalai, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழை பன்னாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னையா சிவசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

காலம் எல்லாம் என்னை
வாழவைத்த கணவாளனே
காலன் அவன் பார்வையில்
சென்றதேனோ என்னை தவிக்க விட்டு?

 வரமென என் வாழ்வில் வந்த தவமே
காலன் உன்னைக் காவுகொண்டு
ஆண்டு ஒன்று ஆனதுவோ
நம்ப முடியவில்லை
 உங்கள் நினைவால் நாம்
 நாளும் தவிக்கின்றோம் - உயிரே!

அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை அனுதினமும்
அரவணைத்தாய் அல்லும் பகலும்
அயராமல் எமை காத்தாய்
உலகுக்கு நீ உத்தமனாய்
வாழ்ந்து நின்றாய்

உயிரிலும் உணர்விலும்
ஒன்றாக கலந்திருந்தாய்
உயிர் உள்ள வரை உங்களோடு
இருப்பேன் என்றாய்
ஒன்றுக்கும் கலங்கவில்லை
நாம் உன்னோடு இருந்தவரை

உள்ளத்தில் பல கனவு
ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும்
காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லை

என்றும் உம் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 10 May, 2021
நன்றி நவிலல் Mon, 07 Jun, 2021