சின்னதம்பி பாலசுப்பிரமணியம் : பிறப்பு: 09/08/1929 - இறப்பு: 31/08/2015
யாழ். தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா, மொன்றியல் கோன்வால் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதம்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
இராசம்மா பாலசுப்பிரமணியம் : பிறப்பு: 18/10/1931 - இறப்பு: 24/09/2007
யாழ். கோப்பாயை பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா, மொன்றியல் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா பாலசுப்பிரமணியம் அவர்களின் 19ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பதினொன்று போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இலா வீடானோம்- அம்மா அப்பா!!!
இறைவனில்லா கோயிலாக
பிறையில்லா வானமாக
திசையில்லா படகாக
திகைக்குதம்மா உன் குடும்பம்!
துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
ஓய்ந்துவிட்ட ஓவியமே!
வளர முடியாத வளர்பிறையே!
வருவாயா? மறுபடியும் எங்கள் அம்மா அப்பா!!!
திருப்ப முடியாத காலத்தை
உங்கள் நினைவுகளுடனும்
நிழல் படத்தினூடாகவும்
திரும்பிப் பார்க்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தொடர்புகளுக்கு
- Mobile : +16136626397