சின்னதம்பி பாலசுப்பிரமணியம் : பிறப்பு: 09/08/1929 - இறப்பு: 31/08/2015
யாழ். தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா, மொன்றியல் கோன்வால் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதம்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
இராசம்மா பாலசுப்பிரமணியம் : பிறப்பு: 18/10/1931 - இறப்பு: 24/09/2007
யாழ். கோப்பாயை பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா, மொன்றியல் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா பாலசுப்பிரமணியம் அவர்களின் 16ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்ந்த நாட்களை
வசந்தமாக்கி விட்டுச்சென்ற அம்மா அப்பாவே!
உதிர்ந்தது நீங்கள் மட்டுமல்ல
உடைந்தது எங்கள் இதயமும்தான்!
நிழலில் இசைந்தாடி நினைவில் இழைந்தோடி
நெஞ்சில் உயிர் வாழும் தெய்வங்களே!
உங்களை மண் கடல் வான் உளவும் மறவோமே!
அன்புடை நெஞ்சங்கள் சிந்தனை இழந்து
என்புருக ஏங்கிட்டு பார்க்க
எம்மை துயரிலே மூழ்க வைத்து
பன்முகன் காலனோடு நீங்கள் சென்றதேனோ?
சோகத்தின் சுமைதனை
சுமக்கின்றோம் இதயமதில்
பாசத்தின் உறவுகள் நாம்
பரிதவித்து வாடுகின்றோம்
நேசத்தை மறந்து ஏன்
இருவரும் நெடுந்தூரம் சென்றீர்கள்?