10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செந்தூரி சந்திரகுமார்
குயின்மேரி பல்கலைக்கழக மருத்துவபீட இறுதி ஆண்டு மாணவி
வயது 24
அமரர் செந்தூரி சந்திரகுமார்
1990 -
2015
South Harrow, United Kingdom
United Kingdom
Tribute
11
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
லண்டன் South Harrow வைப் பிறப்பிடமாகவும், Wood stock Oxford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செந்தூரி சந்திரகுமார் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்து ஆண்டுகள் ஆனாலும்
உன் நினைவுகள் என்றும்
அழியாத பொக்கிஷம் மகளே!
எம் வாழ்வில் தென்றலென
வந்துதித்த எம் செல்வமே
பண்பின் உறைவிடமாய்!
பாசத்தின் திருவிளக்காய்!
அறிவின் சிகரமாய் மிளிர்ந்த
என் அன்பு மகளே...
எங்கள் நிலாவே... நீ எங்கே?
நிலவுபோல் எங்கள் உள்ளத்தில்
நீங்கள் இடம்பிடித்து நித்தமும்
புன்னகையுடன் வலம் வந்தவளே....
எங்கள் அன்புச் செல்வம் நிலாவே...
இன்று உன் உருவம் காணாது
உருகுகின்றது உள்ளமெல்லாம்
அன்பால் எம்மை அரவணைத்து
பண்பாலே எமை வழிநடத்தி
நிலையில்லா வாழ்வினிலே
நீங்காத நினைவுகளைத் தந்து
நிலையான வாழ்வு தேடிச் சென்றீரோ...
எப்போது நீ வருவாய் என்று
காத்திருக்கின்றேன் உன் நிழலாய்...
தகவல்:
குடும்பத்தினர்