

லண்டன் South Harrow வைப் பிறப்பிடமாகவும், Wood stock Oxford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செந்தூரி சந்திரகுமார் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்று வரை நாம் ஐந்து வருடங்கள் நகர்ந்தும்
உன்னோடு வாழ்ந்த நினைவில்
ஒரு துளியும் மறக்கவில்லை..
கற்பனை உலகில் நாட்களை நகர்த்தி
ஜடமாய் நகர்கின்றோம் ஒவ்வொரு நொடியும்
அன்பு மகளே..
வாழ்வினிலே சிறந்து வளமாக வாழ்ந்த உன்னை
காலனவன் கவர்ந்து சென்ற
காரணத்தை நாம் அறியோம்?
பாருலகம் கண்ணீரை
மழையெனவே சிந்திடுதே- நீ
வானுலகம் சென்றாலும் உன் நினைவதுவோ
எம் நெஞ்சில் என்றும் அகலாது ...!
பாசமுள்ள சகோதரியே எம்மை
பரிதவிக்க விட்டு பறந்து நீ சென்றதும் ஏனோ?
கலங்கி துடித்தாலும் கண் காணாமல் நாம்
அழுதாலும் உன் ஆன்மா ஆண்டவன்
காலடியில் சாந்தியடைய அனுதினமும்
நாம் இறைவனை பிராத்திக்கிறோம்!
எமையசைத்து பார்க்கிறது
எம்முறவே எப்பிறப்பில் உம்மை
நாம் காண்போமே? நிம்மதி கொண்ட போதும்– எம்
கண்கள் கடல் ஆகின்றன- உன் காலடியில் எம்மன்பை
நினைவு மலர்களாய் சமர்ப்பிக்கின்றோம்..