யாழ். துன்னாலை தெற்கு கொற்றை உடையார் பகுதியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, மட்டக்களப்பு, காலி, மன்னார், கொழும்பு ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்டிருந்த செல்வத்துரை பஞ்சாட்சரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 03/04.09.2021
எங்கள் அன்புத்தாயே
எம்மை பெற்று வளர்த்து
அன்புக்கும் பாசத்திற்கும் உறைவிடமாய்
அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழி நடத்திய எம் அன்புத்தாயே!
உதிரத்தில் உயிர் தந்து, உதிரத்தை
பகிர்ந்தளித்தீர்,
உதட்டோரப் புன்னகையால், இன்முகம்
மலர்ந்திடுவீர்,
அன்பான மொழிபேசி, உறவுகளை
அரவணைத்தீர்,
உங்களது அன்பான அரவணைப்பாலும்,
இனிமையான, நேர்மை கலந்தபேச்சாலும்,
அயலவர்களால் பஞ்சாட்சர அக்கா என
எல்லோராலும் போற்றி மதிக்கப்பட்டீர்கள்
அம்மா என்ற சொல்லுக்கு அர்த்தமாய்,
அன்பையும், பாசத்தையும் குவித்துவிட்டு,
எம்மை விட்டுப் பிரிந்து ஆண்டொன்று ஆனாலும்,
ஆறாததுயரத்தில் வாழ்கின்றோம்,
உம்மை இழந்த துயரை ஈடு செய்யமுடியாது,
உள்ளதில் உங்களை சுமக்கின்றோம்
எம் மனது உங்கள் நினைவோடு
எந்நாளும் வாழ்ந்துகொண்டிருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய – குலதெய்வ
குளக்கட்டு நுணுவில் பிள்ளையார்,
கொற்ற உடையார் பூதவராயர், காளி உட்பட
தெய்வங்களைப் பிரார்த்திக்கின்றோம்
என்றும் உம் பிரிவால் வாடும் அன்பு
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், உறவினர்கள்!!!
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு, முதலில் எமது கண்ணீர் அஞ்சலிகளைச் செலுத்துகின்றோம். மேலும் எமது நாடு சுதந்திரம் அடைய முன்னர் இலங்கைத்தீவில் ஆங்கிலேய தேசத்துப் பெண்மணிகள்...