யாழ்ப்பாணம் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா யூலியன் ரெறன்ஸ் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டும், பார்த்தும்
உளமாற இரங்கல்களை தெரிவித்தும்,
நம் துயரத்தில் பங்கெடுத்த,
உலகமெல்லாம் ஆங்காங்கே பரந்து வாழும்
நம் உற்றார் உறவினர்க்கும் மற்றும் நேசமிகு நண்பர்களுக்கும், பரிவோடு பசியாற்றி
சோர்ந்து போகாமல் நமை தேற்றி
இறுதி நேரம் வரை உறுதியோடு
நம் தோளோடு தோள் நின்று
பக்க பலமாய் இருந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும்,
நாம், உளமாற நன்றி கூறிக்கொள்கின்றோம்.
மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரே? கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர் துளிகளைக் காணிக்கையாக்குகிறோம்.