யாழ்ப்பாணம் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா யூலியன் ரெறன்ஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று உருண்டோடி
மறைந்தாலும் அகலாது உங்கள்
அன்புமுகம் எமைவிட்டு அன்போடும்
பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புத் தந்தையே
ஓராண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக
நாமும் கண்டோம் கனவெல்லாம்
நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லையே!
உதிர்ந்து நீங்கள் போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும்
உறைந்திருக்கும்
உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து
உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள்
கண்ணீர்த் துளிகளைக்
காணிக்கையாக்குகின்றோம்...!
உங்கள் பிரிவால் வாடும்
பாசமிகு மனைவி, பிள்ளைகள்..