Clicky

மண்ணில் 11 OCT 1950
விண்ணில் 19 SEP 2022
அமரர் செல்லப்பா வேலுப்பிள்ளை கதிர்காமநாதன் (துரை)
செல்லப்பாபிள்ளை அன் சன் கிரான்பாஸ்- கொழும்பு
வயது 71
அமரர் செல்லப்பா வேலுப்பிள்ளை கதிர்காமநாதன் 1950 - 2022 காரைநகர் தங்கோடை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
துரை மச்சானுக்கு !
Late Sellappa Veluppillai Kathirkamanathan
காரைநகர் தங்கோடை, Sri Lanka

துரை என்றதும் உரை என்றது அன்பு பாசம் கனிவு!காலமும் எம்மோடு வரிந்து கட்டி நல்ல மனிதர்களை காவு கொள்கிறது . மரணத்தை மரணிக்க வைக்கும் வல்லமை அற்றவன் மனிதன்! செல்லப்பா வேலுப்பிள்ளை என்ற ஆலமரம் மீண்டும் ஓர் உதிர்வை அணைத்தது. உறவின் வலிமையை பிரிவின் வலி வெல்ல ஆறாத் துயரம் நெஞ்சில் நிறைந்தது . எங்கே மீண்டும் ஒரு முறை என்னை மச்சான் என வருட மாட்டாயா? மாமி எப்படி எனக் கேட்க மாட்டாயா? என மனம் ஏங்குகிறது! துரை மச்சானுக்கு அஞ்சலி செய்ய காலம் இடும் கட்டளையை நாம் மறுத்தாலும் நிஜம் எம்மைத் துரத்துகிறது. ! என்றும் எம்முள் உங்கள் நினைவுகள் வாழும். துரைமச்சானின் பிரிவால் வாடும் குடும்பத்தாரின் கைகளை பற்றி நிற்கும் காரைநகர், இடைப்பிட்டி - சின்னாலடி கந்தையாபிள்ளை நடராசா குடும்பத்தினர் ( மாமி, ருத்ரா -இந்தியா, ரமணன் - கனடா, ரதி, ரூபி-லண்டன்)

Write Tribute

Tributes