நன்றி நவிலல்
பிறப்பு 02 JUN 1994
இறப்பு 19 SEP 2019
அமரர் சாரங்கன் சந்திரகாந்தன் (சாரு)
உரிமையாளர்- NAVA EQUIPMENT Company
வயது 25
அமரர் சாரங்கன் சந்திரகாந்தன் 1994 - 2019 கனடா, Canada Canada
நன்றி நவிலல்

வாழ்க்கை என்னும் பயணத்தில் - நீ
கடந்ததுவோ பாதி வழி
நீதி வழி தனித்திருந்து
உன் பாதங்கள் பதிவதற்காய் காத்திருக்க
அகாலத்தில் அஸ்தமித்துப் போன
எங்கள் அன்பு சாரங்கன்!
துப்பாக்கி வடிவில் ஒரு காலன்
உனக்கு வருவான் என
கனவிலும் நாம் கருதவில்லை
கண்டபின்னும் நாம் நம்பவில்லை

நீ எமைப் பிரிந்து முப்பத்தொரு நாட்கள் ஆனதையா!
ஆனாலும் நம் ஈரவிழி காயவில்லை!
எமை விட்டு நீ வெகு தூரம் சென்றாலும்!
நாம் உம்மை என்றும் மறவோம் !

அன்னாரின் மறைவுச் செய்தி அறிந்தவுடன் உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் உடனடியாக எம்மில்லம் நாடி ஓடி வந்து வேண்டிய உதவிகள் செய்த உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள் ஆகியோருக்கும், துக்கம் விசாரித்தவர்களுக்கும், வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் இருந்து தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும், மரணச்சடங்கு இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், மலர்வளையங்கள் வைத்து சாந்தி அஞ்சலி செலுத்தியவர்கள் இன்னும் ஏனைய நெஞ்சங்கட்கும் எமது இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 27 Sep, 2019