சுவிஸ் Solothurn ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சனித்னோஜன் அனுகரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
ஆடியில் பிறந்தவனே ஆடம்பரமாய்
வளர்ந்தவனே முத்துலிங்கம்
குடும்பத்தின் குலதெய்வமே..
அனுகரனின் அன்பு புதல்வனே
எனதருமை மருமகனே சனோஜ்.
உறவுகளை ஏங்கவிட்டு எப்படித்தான் போனாயோ...
இந்த அத்தயை தவிக்க விட்டு ஏன் இப்படி சென்றாயோ...
பொறுப்புகளை முடிக்காமல் புறப்பட்டு விட்டாயோ
சொந்தங்களை காணாமல் சொர்க்கத்துக்கு சென்றாயோ.
கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகி போனாலும்
எங்கள் முன்னே உன் முகம் எந்நாளும் உயிர்வாழும்.
மண் விட்டு மறைந்து நீ வின்ணோக்கி சென்றாலும்
கண்விட்டு மறையாமல் கனகாலம் இருப்பாய்.
வார்த்தை தடுமாறுகிறதே நேற்று கண்ட உனை நினைத்து.
நெஞ்சம் உறுமாறுகின்றதே காந்தமாய் எமை ஈர்த்த
உனை காலன் உனை கவர்ந்து சென்றதேனோ
காலமெல்லாம் உன் உறவு நினைத்துருக காததூரம்
எமை விட்டு சென்றதேனோ.
நாமோ!! இன்று மங்காத உன் நினைவால்
மயங்கியே நிற்கின்றோம்.
மனித வாழ்வில் மரணம் இயற்கைதான்.
இயற்கையாக வந்தால் ஏற்கலாம்.
சதிகார கூட்டம் உனக்கு எமனாக வந்ததடா மகனே..
சூழ்ச்சி உன்னை வீழ்த்தியதடா மகனே.
நீ வாழ வேண்டிய வயதில் வாடிய
மலராகி உதிர்ந்து போன உன்னை எப்படி மறப்பது.
கோபுரம் சாய்ந்ததே கொடுந்துன்பம் நேரிட்டதே.
எங்கள் கோலங்கள் அழிந்ததுவோ.
ஏது கதி தாங்க முடியாத துயரத்தில் தவிக்குதையா
எம் நெஞ்சு அமைதியாக துயிலும் உன் ஆன்மா
இறைபதம் சேர இறைவனை இறைஞ்சுகின்றோம்
ஓம் சாந்தி!! சாந்தி!! சாந்தி!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Ich wünsche allen Angehörigen viel Kraft zum Verlust und herzliches Beileid.