Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சனித்னோஜன் அனுகரன் (சனோஜ்)
மறைவு - 30 JUL 2024
அமரர் சனித்னோஜன் அனுகரன் 2024 Solothurn, Switzerland Switzerland
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி:30/07/2025

சுவிஸ் நாட்டை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அனுகரன் சனித்னோஜன்(சனோஜ்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு ஓடியே போய் விட்டது மகன் சனோஜ்..!
 இன்றளவும் எங்கள் மனம்
 நீ திரும்பி வரமாட்டாயா என
 ஏக்கத்துடன் காத்துக்கிடக்கின்றது..!

மகன் என கூப்பிட நீ இல்லை!
 அண்ணா என அழைக்க நீ இல்லை!
நண்பனுக்காய் ஓடி வர நீ இல்லை!
 உறவுகளுக்காய் நிற்க்க நீ இல்லை!

ஆனாலும் உன் நினைவும்
 உன் சிரித்த முகமும்
 உன் ஞாபகமும் எங்கள் மனதில்
 ஒவ்வொரு நிமிடமும் வருவதை
 நிறுத்தவில்லை மகன்

உன் அன்பை , பண்பை, ஆளுமையை, அறிவை என்றும்
 எங்கள் மனதில் நினைத்திருப்போம் மகன் சனோஜ்!

சனித்னோஜனின் ஆத்மா
சாந்தியடைய பிராத்திக்கின்றோம்..!

ஓம் சாந்தி சாந்தி சாந்தி 

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos