Clicky

நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 27 APR 1964
இறப்பு 20 FEB 2024
அமரர் சந்திரமோகன் சம்பந்தபிள்ளை
Easy Shipping Ltd நிறுவனத்தின் ஸ்தாபகர்
வயது 59
அமரர் சந்திரமோகன் சம்பந்தபிள்ளை 1964 - 2024 மீசாலை, Sri Lanka Sri Lanka
நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரமோகன் சம்பந்தபிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எம்மோடு இருந்து
எம்மையெல்லாம் இயக்கி
எமக்கு வழிகாட்டி
பாசமிகு குடும்ப தலைவனாய்
 பண்புள்ள அன்பராய் வாழ்ந்த
 எங்கள் இல்லத்தின் இதய தெய்வமே!

நாங்கள் பண்புடனே வாழ பக்குவமாய்
சொன்ன வார்த்தைகள் என்றும்
 எம் மனங்களில் வாழுதையா...!!!

தன்னுடைய கடமைகளை
கவனமாக செய்து முடித்து
 தனியாக இப்போது எம்மை
விட்டு போய்விட்டார்

மாதம் இரண்டு அல்ல
 ஆயிரந்தான் சென்றாலும்
 உங்கள் தோற்றமும் உங்கள் சிரிப்பும்
 நாம் உள்ள வரை நெஞ்சில் நிறைந்து இருக்கும்

என்றும் உங்கள் நினைவுடன்
வாழும் குடும்பத்தினர்...

எங்கள் குடும்பத்தின் மூத்தமகன் அமரர் சந்திரமோகன் சம்பந்தப்பிள்ளை அவர்களின் துயரச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி மூலமாகவும், முகநூல், மின்னஞ்சல்,  RIPBOOK மற்றும் ஏனைய சமூகவலைத்தளங்கள் ஊடாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,அத்துடன் அவருடையஇறுதி கிரிகை மற்றும் வணக்க நிகழ்விலும் எங்களுடன் நின்று , அவரை மண்ணுலகில் இருந்து விண்ணுலகை நோக்கி வழியனுப்பி வைக்கும் இறுதி நிகழ்வுவரை கலந்து கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும், மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களால் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் அவரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும், குறிப்பாக இறுதி நிகழ்வுக்கு மலர்வளையம் கொண்டுவந்து அவரின் அஞ்சலி நிகழ்வை சிறப்பித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின்  நினைவஞ்சலியும், நன்றி நவிலலும் 20-04-2024 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெறவிருக்கும்  அவர்களின் ஆத்ம சாந்திப் பிராத்தனையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் உங்களை கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:-
Tolworth Recreation Centre
Fullers Way N, Tolworth, Surrey KT6 7LQ,
United Kingdom.


இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 25 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 20 Feb, 2024