


பல்கலையில் நான் கண்ட இயற்பியல் தோழி நீ, பாரதி! ஆறாத் துயர் தந்து இன்றோ நீ மீளாத் துயில் சென்றனையோ! காணாது புலம்பெயர்ந்து சென்றபோதும் கண்களுக்குள் கனவுகளாய் வந்து சென்றனையே. வாழ்நாளில் என்றோ வருவாயென... மாறாத நினைவுகளைச் சுமந்தபடி நானிருக்க வீணாகி சென்றனையோ விண்ணுலகு! முகநூல் வழி வந்த இத்துயர் சேதி முழுதாய் ஏற்க மனம் மறுக்கிறதே| பாரதி! ‘புவி வாழ்வை பாதிவழி விட்டு சென்றாள்’ எனும் வார்த்தை பரிதவிக்க வைக்குதடி தோழி! சடுதியாய் வந்ததேன் உன் பிரிவு?- அது சற்றேனும் எதிர்பார்க்காப் பேரிழப்பே! புன்னகை பூவே நீ ! இன்று பூக்காமல் உலர்ந்ததேனோ! அமைதியின் உருவம் நீ மெல்ல ஆழமாய் விழி மூடி உறங்குறாயோ! அடக்கத்தின் இருப்பு நீ - எந்த அசைவும் அற்று தூங்குறாயோ! பண்பின் பெருந்தகை நீ - அந்த பரமபிதா பாதம் அடைந்தனையோ! என் விழிகள் மூடுகையிலும்.. நீள்கிறதே உன் நினைவின் அசைவுகள். எத்தனை பிறவி பெற்றாலும் இப்பிறவியின் அருநட்பாய் என்றும் வரவேண்டும் தோழியாய் நீ! தோழி சிசில் பாரதி!! Srigeetha ============================================================================
Please accept our deepest sympathy. We Pray for her soul to Rest in Peace. We hope that your family will be alright. May her soul watch over you forever.