

-
15 MAR 1977 - 27 JUN 2021 (44 வயது)
-
பிறந்த இடம் : கரவெட்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Bromley, United Kingdom

கலங்காத தடாகம் போல அமைதி வானிலே வெள்ளி பூத்தாற்போல் புன்னகை அனிச்சமலர் இதழ் போன்ற மென்மை உஷத்கால மென்பனி போல் உள்ளம் குவலயத்தை போலவுமே பொறுமை வனப்பு மிகு அன்னம் போல் நிதானம் இது நாம் அறிந்த பாரதியின் பண்பு முத்து முத்தாய் குழந்தைகள் பெற்று சீராட்டி பாராட்டி வளர்த்து அவ் அணிஞ்சல்கள் ஆளாகுமுன்னே கேளாது போனதெங்கோ எம் ஆருயிர் தோழியே! Sharmila Rajendran ================================================================================ விஞ்ஞானபீடத்தில் சிறு குருவியெனச் சிறகடித்த பாரதி, இன்னும் நம் கண்களுக்குள் அப்படியே இருக்கின்றீர்! துறு,துறென பௌதீக ஆய்வு கூடமெங்கும் நீர் நடந்த அந்த மென் நடையின் ஒலி இன்னும் செவி விட்டு நீங்கவில்லை! தேவாலயமதிலே துணையேற்ற மண நிகழ்வும் இப்போதும் கண்களுக்குள் பசுமையாய்த் தெரிகிறது! மழலைகளின் அன்பில் மனமுருகி வாழ்ந்திருந்தீர்! வாழ்நாளில் எப்போதும் இன்சொல்லால் நிறைந்திருந்தீர்! இறையடியில் சேர்வதற்கு ஏனிந்த அவசரமோ...? உறவுகளைத் தவிக்க விட்டு போக மனம் துணிந்துவோ...? மனங்களிலே நறுமலராய் வாசனையைப் பரப்பி விட்டு, துயில்பவளே ! உமது உயிர் இறை நிழலில் ஆறட்டும்...! Preminy =============================================================================
Summary
-
கரவெட்டி, Sri Lanka பிறந்த இடம்
-
Bromley, United Kingdom வாழ்ந்த இடம்
-
Christian Religion
Please accept our deepest sympathy. We Pray for her soul to Rest in Peace. We hope that your family will be alright. May her soul watch over you forever.