இலங்கை யாழ் தொல்புரத்தை பிறப்பிடமாகவும், தற்போது ஐக்கிய அமெரிக்கா பொஸ்டன் நகரத்தில் வசித்தவருமான திரு. கந்தையா கனகராஜா அவர்கள் யூலை மாதம் 15ஆம் திகதி 2026, புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
எங்களின் வழிகாட்டி
இன்று எங்கள் குடும்பம் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பை சுமந்து நிற்கிறது. எங்களுக்கு அன்பையும் அரவணைப்பையும் அயராது வழங்கி எங்களை வழிகாட்டிய தெய்வம் இறைவனின் பாதங்களில் சரணடைந்தது.
தன்னைச் சுற்றியுள்ளோரை அன்பால் அரவணைத்து, ஊக்கத்தால் உயர்த்தி, மனிதநேயத்தால் இணைத்த அரிய ஆன்மா அவர். அவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பால் நிறைந்திருக்கும்.
அவரது பணிவு, நேர்மை, ஒழுக்கம், உறுதி, தன்னலமற்ற சேவை, நினைவாற்றல் போன்ற உயர்ந்த பண்புகளால் அனைவரையும் அரவணைத்து வழி நடத்தியவர். தொடர்ந்தும் எங்கள் மனங்களில் வாழ்ந்து வழி நடத்துவார்.
அவரது இழப்பு எங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல, அவரை அறிந்த அனைவரின் மனதிலும் ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது ஆன்மா இறைவனின் திருவடியில் சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.”
பொருள்: இந்த உலகில் அறநெறியோடு, ஒழுக்கத்துடன், பிறருக்கு நன்மை செய்து வாழ்பவன், இறப்புக்குப் பிறகு வானுலகில் வாழும் தெய்வங்களுக்கு இணையாகப் போற்றப்படுவான்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, சரஸ்வதி தம்பதியினரின் அருமைப்புதல்வரும்; காலஞ்சென்றவர்களான தம்பையா, சிவபாக்கிய வள்ளிநாச்சன் தம்பதியினரின் அன்பு மருமகனும்;
விக்னராணி (ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்;
அனுஷா, கவிதா, கிருஷ்ணா அவர்களின் பாசமிகு தந்தையும்;
அருளம்பலம் (முரளி), சுகுணன் ஆகியோரின் அன்பு மாமானாரும்;
ஸ்ரீராம், கார்த்திக், லக்சுமி, விஷ்ணுவின் பாசமிகு தாத்தாவும்;
ராஜபுஷ்பம் (பிள்ளை), காலஞ்சென்ற ஆனந்தபுஷ்பம் (குஞ்சு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்;
இராமச்சந்திரன், விக்னராசா, மகாராணி, அழகராசா, காலஞ்சென்றவர்களான ஈஸ்வரசரன், ஹரிதாஸ், பொன்மலர், பவளமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்;
யோகலிங்கம், கமலாம்பிகை, கருணேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரன், சாந்திகுமாரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்;
ரமணி, சந்ரா சுபாஷ், ரோஹினி, பிரசன்னா, நிலானி, கலானி, சங்கீதா, சவீந்திரா, சஞ்ஜேந்திரா, அர்ச்சனா, அனந்தன் ஆகியோரின் அன்பு மாமனாருமாவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Candiah Kanagarayer: A Friend to All, a Stranger to None
Candiah (Raja) Kanagarayer, 85, passed away peacefully on Wednesday, July 15th, 2026 at his home in Medford, Massachusetts, surrounded by his beloved family. He was born on June 14th, 1941 in Tholpuram, Sri Lanka and was the loving husband of Vignarany (Rasathi) for 53 years. His wife and their three children, Anusha, Kavitha, and Krishna, were the heart of his life, reflecting the deep importance he placed on family throughout his years.
Raja was most proud of his service with the U.S. Army from 1977 to 1995 in Iran and Germany, where he displayed tremendous dedication and leadership. He was regarded as a natural leader of the local Tamil community in Frankfurt, as he helped Tamils acclimate after emigrating from Sri Lanka and fostered a united Tamil community. In 1997, he moved with his family to the United States and made Boston their new home, where he cultivated a similar love for community with unmatched warmth and generosity.
Raja enriched everyone around him with his wisdom, charisma, and humor. He embraced life to the fullest and was revered by everyone who knew him for his unwavering care and compassion, always going out of his way to support others. He lived by the principle of always doing the right thing, guided by the values of punctuality, honesty, and loyalty. Deeply devoted to his family and friends, he remembered every important detail that made each of them feel special. Those who knew him will forever cherish the vivid stories he shared, which captivated and entertained everyone in the room.
He was the beloved son of the late Candiah and late Saraswathy Kanagarayer, and the cherished son-in-law of the late Thambaiyah and late Sivapakkiya Vallinayagam. He was the devoted father of Anusha, Kavitha, and Krishna; respected father-in-law of Arulambalam (Murali) and Sugunan; adored grandfather of Shreeram, Karthik, Luxmi, and Vishnu; beloved brother of Rajapushpam (Pillai) and late Anandapushpam (Kunchu); dear brother-in-law of late Eswarasaran, late Haridas, late Rajeswaran, late Ponmalar, Ramachandran, Kamalambikai, Vignaraja, late Shanthikumari, Yogalingam, Maharani, Alagarajah, Karuneswary, and late Pavalamalar; and loving uncle to Ramani, Chandra Subash, Rohini, Prasanna, Nilani, Kalani, Sangeetha, Shavindra, Sanjendra, Archana, and Ananthan.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
His memory will be treasured forever by all who knew and loved him.
நிகழ்வுகள்
- Sunday, 19 Jul 2026 9:00 AM
- Sunday, 19 Jul 2026 10:00 AM
- Sunday, 19 Jul 2026 11:00 AM
- Sunday, 19 Jul 2026 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +17813956479
- Mobile : +16108580785
- Mobile : +16179092315
- Mobile : +16103020006