யாழ். மிருசுவில் விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவில் கிழக்கை வதிவிடமாகவும், கொழும்பை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லப்பா விவேகானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கா நினைவுகளுடன்..
நீங்கள் என்னை கரம் பிடித்து
பல தசாப்தங்கள் சிறப்பாக
நாம் வாழ்ந்த நம் இல்வாழ்க்கை
உங்கள் மறைவால் ஒராண்டாய்
எனக்கு தனிமையை தருகிறது.
ஆண்டு ஒன்று கடந்தும்
உங்கள் நினைவுகள் என்றும்
நம் கண்முன் வருகிறது தந்தையே.
உறவுகள் பல எமைச் சூழ இருந்தாலும்
பப்பா என்றழைக்கும் உங்கள் இடத்தை
இட்டு நிரவ யாராலும் முடியாது தந்தையே....!
உங்கள் வார்த்தைகள் தந்த கல்வியறிவு
வழிநடத்திய அறிவுரைகள்
பாசமான உணர்வுப் பரிமாற்றங்கள்
பிறரையும் நேசிக்கும் தன்மைகள்
பாகுபாடு இல்லாது பகிர்ந்து
வாழவென்று நீங்கள் காட்டிய வழி முறைகளை
எங்கள் நினைவுகள் உள்ளவரை கடைப்பிடித்து வாழ.......!
எங்களின் தெய்வமாயிருந்து
எங்களை வழிநடத்த
உங்களின் ஆசி வேண்டி வணங்குகிறோம் நாங்கள்.....!
உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரன்கள், பேத்திகள்
ஐயா திருவாளர் விவேகானந்தன் அவர்கள் ஆன்மா இறைவனிடம் இளைப்பாற எமது வேண்டுதல்களை காணிக்கையாக்குகிறோம் ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி