யாழ். மிருசுவில் விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவில் கிழக்கை வதிவிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா விவேகானந்தன் அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் பிரிவுச்செய்தி கேட்டு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்கள், சட்டம், தொழில் சார்ந்த நண்பர்கள், நிறுவனங்கள், மலர் மாலைகள் சார்த்தி, மலர் வளையங்கள் வைத்தும், பதாதைகளை வைத்து அஞ்சலி செய்தோருக்கும் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், எங்களுக்கு பல வழிகளிலும் உதவி செய்த சகலருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 10-02-2020 திங்கட்கிழமை அன்று மோதரையில் நடைபெற்றது. 12-02-2020 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் ஆத்ம சாந்தி பிராத்தனை நடைபெற்று பின்னர் 15-02-2020 சனிக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் இல. 75 லோறன்ஸ் வீதி, பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
ஐயா திருவாளர் விவேகானந்தன் அவர்கள் ஆன்மா இறைவனிடம் இளைப்பாற எமது வேண்டுதல்களை காணிக்கையாக்குகிறோம் ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி