Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 OCT 1965
இறப்பு 01 JUL 2023
அமரர் பிரபாகரன் ராஜினி (பாப்பா)
வயது 57
அமரர் பிரபாகரன் ராஜினி 1965 - 2023 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நல்லூர் மூத்த விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Epinay ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரபாகரன் ராஜினி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 20-06-2024

என்னவளே என் இனியவளே!
காலங்கள் உருண்டு போனாலும்
கண்முன்னே நிழலாகும் உம் நினைவுகள்
 ஒரு போதும் என்னை விட்டு அகலாது!

ஆண்டு ஒன்று ஆன போதிலும்
 நீங்களில்லா துயரம்
 இன்னும் ஆறவில்லை அம்மா!!
 எம்மை படைத்த எங்கள் குலதெய்வமே
 பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு.
அன்பு பெருக அணைத்த கரங்களும்,
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்,
இன்பம் தரும் தங்கள் இனிய சொற்களும் இன்றியே
நாங்கள் இயல்பிழந்தோம் அம்மா!!
 ஒரு வருடம் உருண்ட போதிலும்
 உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
 ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில்
 உங்களின் ஞாபகம் அம்மா! மீண்டும்
வரமாட்டாயா என ஏங்குதம்மா உன் உயிர்கள்!

உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரியே!
எங்களுடன் பிறந்தவளே எம் அருமைச் சகோதரியே!
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எங்களுக்கு சகோதரியாய் பிறந்திடவே
ஏங்குதம்மா எம் இதயங்கள்!!

உங்களின் மீதான எங்களின் தேடல்
 எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!!  

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 04 Jul, 2023