கடல்கடந்த தேசமதில்....நீர்
கனவுடனே மகிழ்ந்தீரே பவன்
காலன் இளவயதில் பறித்தானோ
கதறியழ இனியாருளர்....ஐயகோ!
பெற்றவரும் உற்றவரும் கதறியழ
கட்டியவள் கண்ணீரில் வழியனுப்ப
பெற்றபிள்ளை உமை தேடியழ - நீர்
நீள்தூக்கம் கொள்கிறீரே....ஐயகோ!
பலர் கூடி உமை வழியனுப்ப...இன்று
பொல்லாத நோய் கூட விரட்டி நிற்க
சொல்லாமல் சென்றீரோ பவன் நீர்
சென்றதூரம் யார் அறிவார் ...ஐயகோ!
அன்னாரின் துயரில் ஆழ்துயருற்றிருக்கும் குடும்பத்தார்களுடன் நாமும் இணைத்து ஆன்மா இறைபதமடைய பிரார்த்திப்போமாக....
பிரிவில்...
திருமதி.தே.தர்மலிங்கம் குடும்பம்.
சங்கத்தானை, சாவகச்சேரி,