Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 27 MAY 1934
மறைவு 16 JUL 2020
அமரர் பஸ்ரியாம்பிள்ளை மேரிபோல் தங்கராஜா (தங்கராஜா மாஸ்ரர்/ திரவியம்)
இளைப்பாறிய ஆசிரியர்
வயது 86
அமரர் பஸ்ரியாம்பிள்ளை மேரிபோல் தங்கராஜா 1934 - 2020 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். பண்டத்தரிப்பு கீரிமலை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பஸ்ரியாம்பிள்ளை மேரிபோல் தங்கராஜா அவர்கள் 16-07-2020 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற லூதர் பஸ்ரியாம்பிள்ளை, றோசலீன் சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற ஜெயராஜதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

செரின் டக்சினி, ஹரிச்சந்திரா, காமினி(கனடா), மெலோனி(அவுஸ்திரேலியா), பிரேமச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஜோண் தம்பிஐயா, மேரி இராசாத்தி(மாணிக்கம்), ஜோசப் பாலச்சந்திரன், சூசின் தங்கரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வினோகுருபாதம்(Commercial Bank- சுன்னாகம்), சுபாஷினி(ஆசிரியை- யாழ் சன்மார்க்க மகா வித்தியாலயம்), கிறிஸ்ரிதங்கராஜா(கனடா), அருட்சுதன் ஞானசீலன்(அவுஸ்திரேலியா), ஷேளி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரோன் வான்மதி(மொரட்டுவ பல்கலைக்கழகம்), சலோம் துஷ்யந்தி(கொழும்புப் பல்கலைக்கழகம்), வெஸ்ளி(யாழ் பல்கலைக்கழகம்), நித்தியஜீவன்(யாழ் பரியோவான் கல்லூரி), தேனுகா, சிந்துகா(கனடா), டியோன், ஜொனத்தன்(அவுஸ்திரேலியா), இலாஞ்சவின், ஜவன் சாமுவேல், ஒலிவியா, இவ்லின்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 18-07-2020 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பண்டத்தரிப்பு  CACM சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்