யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பாஸ்கரன் ஜெகநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
ஈழமணித் திருநாட்டின் வடக்கே
தேனுறும் யாழ்ப்பாணக் குடாநாட்டின்
செம்பாட்டு மண்ணின் செழிப்புகளும்
ஆழக் கிணறுகளின் வற்றாத நீருற்றும்
அள்ளிப் பருகும் பேறு பெற்ற
உத்தமர்கள் வாழ்ந்த உரும்பிராய் பதியிலே
ஊருக்கு உழைத்த சீமான் ராசா வேலுப்பிள்ளை பரம்பரையில்
மருதனார் மடம் வீதியிலே உயர்ந்து நிற்கும்
நாச்சார் வீடுதனில் தேக்கு மரம்
கடைந்து செய்ததொரு தொட்டினிலே
சின்ன மணிக்கண்ணை இமைக் கதவாய் மூடி
தாய்மைக்கு புகழ் சேர்த்த மறைந்த
ஜெகநாதன் மாமியின் திருவயிற்றில்
பத்து சகோதரங்கள் சூழ்ந்துநிற்க
கடைக்குட்டியாய் உள்ளம் எதிர்பார்க்கும் ஓவியமாய்
அவர் மடியில் பிள்ளையாய் வந்து பிறந்த
பெரும் பேறே பாஸ்கரனே!
சின்ன மலர் வாய் சிரித்தபடி நீ பால்குடித்தாய்
காராநம் வானத்தில் காணும் முழு நிலவாய்
வளர்ந்து வந்தாய்
நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை
அன்பர்களை சீர்திருத்தி ஓரே வண்டியில் பூட்டவல்ல
ஈடற்ற தோழா! இளம் தோழா! ஆணழகா!!
உரும்பிராய் இந்துவிலே எமக்கு
மனமேறுகின்ற மகிழ்ச்சி தந்த பெருங்கடலே
நண்பர்கள் எங்களுக்கு நீ
நீராரும் தங்கக் கடலில் கண்டெடுத்த நித்திலமாய்
ஓசை அளித்து மலர் கண்கின்ற தேன் வண்டாம்
நீதி தெரிந்து நீழ் கரத்தில்
வாளேந்தி எமக்கா போராடும் தானைத் தளபதியே
இன்று காலங்கள் ஓடி தேசங்கள் மாறி
நீ காதலித்து கை பிடித்த கண்மணியோடு
முழுகாமல் முழுகாமல் அவள் பெற்ற பொக்கிசத்தை
ஈக்கள் நுழையாமல் இட்ட திரை நடுவில்
பொன்மகனாய் உதித்த நீலக் கண்ணன்
உற்ற மகிழ்ச்சியிலே நீ
தத்தளிக்கும் செய்தி கேட்டு
மகிழ்ந்து வரும் வேளை
எல்லாம் அவன் செயலே என்று ஆறமுடியாமல்
தீராத நோயுற்று பாஸ்கரனின்
மகத்துவத்தை அறியாது
அவன் வாழ்வை வியலாக்கா
போராடி போராடி அவனை உருக்குலைத்து
வெல்லம் போல் விழுங்கி
வேரோடு கட்டையிலே இன்று சாய்த்த
விதி தன்னை வெந்திடுவோம்
நொந்துவிட்ட நாம் இன்று
நொறுங்கி விட்டோம்
உயிரற்ற உனது உடலைக்
காணத் துடிக்கின்றோம்
உன்னோடு நாம் கழித்த
ஒவ்வொரு மணித்துளியும்
எம் மரணப் படுக்கையிலும்
மறவாது எம் நண்பரே!!
அங்கே காத்திருப்பாய்! நாமும்
விரைவில் வந்து நிற்போம்
கரம் கோத்து மீண்டும் மகிழும் வரை
அன்பனே அமைதியாய் கண்ணுறங்கு!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 14-11-2022 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்றும்.
We are sorry for your loss, our thoughts are with you and your family.