யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பசில் டெனிந்திரன் றிச்சேட் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
நட்பின் இலக்கணமாய்
வாழ்ந்த
எம் குடும்பத்தின்
குலவிளக்கே
நீங்கள்
எம்முடன் இல்லாவிட்டாலும்
எம் மனதில்
எப்பொழுதும் வாழ்வீர்கள்
நீர் எம்முடன் வாழ்ந்த நாட்களின்
நினைவுகள் எம் விழிகளின் ஓரம்
கண்ணீர்த்துளியாய்
கரைந்தோடுது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
We love you so much Denny Mama. ❤️