Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 13 JAN 1954
விண்ணில் 25 OCT 2020
அமரர் பாலசிங்கம் துரைராஜா
முன்னாள் சிவா கூழ் பார் உரிமையாளர், யாழ்ப்பாணம்
வயது 66
அமரர் பாலசிங்கம் துரைராஜா 1954 - 2020 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 10ம் வட்டாரம் பொன்னாந்தோட்டத்தை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் துரைராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் மூன்றாயினும் ஆறாது
எம் துயரம்
வலிகளை சுமந்து வாடி
அழுகின்றோம்!
நினைவுகள் வருகையில் நிலைகுலைந்து
நிற்கின்றோம்!!

ஆயிரம் பேர் ஆறுதல் கூறினாலும்
உங்கள் பிரிவை நெஞ்சம் ஏற்க
மறுக்குதய்யா!
நேற்றுப் போல் இருக்கின்றது
நாங்கள் வாழ்ந்த இன்ப வாழ்க்கை
 நினைவுகள்
யார் கண் பட்டதோ எங்கள் குருவிக்கூடு
 கலைந்ததுவே!

அன்பிக்கே சாவு என்றால் அகிலமே
தாங்காதய்யா!
என்னுயிர் உறவே ஐயா மீண்டும் வந்து
 விடுங்கோ!
ஏங்கி நாம் தவிக்கின்றோம்

இந்த மண்ணில் உம்மைப் போல் யார் வருவார்?
எம் துயர் போக்க எண்ணிப் பதைக்கின்றோம்
விண்ணில் தேடுகின்றோம்!!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.. 

தகவல்: மனைவி, வேதாதுரை மற்றும் உற்றார் உறவினர்கள்