யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 10ம் வட்டாரம் பொன்னாந்தோட்டத்தை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் துரைராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டாகியும்- என்
விழி வளி ஓடிய கண்ணீர்
இன்றும் காயவில்லை
காலம் உருண்டு ஓடிகின்றது- விழிகள்
உங்களை தேடுகையில்- விழிநீர்
ஆறாக ஓடுகின்றதே- உங்களை
நினைக்கும் போதெல்லாம்
நினைவுகள் என் விழி ஓரம்
கண்ணீராய் கரைகின்றதய்யா...
உங்கள் அன்பு முகம்
அழகின் திருவுருவம்
எங்கள் கண்முன்னே நிழலாடுதய்யா
அழகிய புன்னகையும்
அனைத்த கைகளும் எங்கே
அன்பை சுமந்த இதயத்தை
ஆண்டவன் சீக்கிரம் கூட்டி சென்றது ஏன்...
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜத்தைத் தேடுகின்றோம்
தினமும் திக்கற்று தவிக்கின்றோம்
திரும்பி வர மாட்டீரா
உறவுகள் ஆயிரம் அனைத்திட
இருந்தாலும் உம்மை போன்று
அன்பு காட்ட யாரும் இல்லை
என்றும் உங்கள் உறவை தேடும் மனைவி...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
ஆண்டுகள் பல ஆனாலும்
என்றும் உங்கள் நீங்கா நினைவுகளுடன்
வாழும்
அன்பின் துணைவி வேதநாயகி துரை
மற்றும் குடும்பத்தினர் உற்றார் உறவினர்!
ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றௌம்