யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 10ம் வட்டாரம் பொன்னாந்தோட்டத்தை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் துரைராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நிலையில்லாத உலகினிலே
நினைவுகள் நிலைக்கின்றன
மணமில்லாத மலர்கூட
மலர்ந்து இன்பம் அளிக்கின்றது
உறவென்ற கனவினிலே
உலகையே மறக்கின்றது
பிரிவென்ற துயரிலே
பேதையுள்ளம் தவிக்கிறது
கரம் பிடித்தவளோடு வாழ்வில் பக்க பலமாய் இருக்காது
பாதியில் பரிதவிக்க விட்டு கண் இமைக்கும் நேரத்துக்குள்
நெடுந்தூரம் விரைந்தோடி சென்றதேனோ!
நாட்களும் பறந்து செல்ல வருசமும் ஒன்றானது வேர் இல்லா
மரம் போல ஒவ்வொரு நாட்களும் இழப்பின் வலியை
சுமந்து நடைப் பிணமாக நிற்கின்றேன்.
காலன் உம்மை கவர்ந்து சென்றாலும் என்றும் எம்முடன் வாழ்ந்து
கொண்டுதான் இருக்கின்றீர்கள் கலைக்க முடியாத கனவுகளோடு
காலங்களும் உருண்டு ஓடுகின்றது
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
எம் இதயத்தை விட்டு நீங்காது உங்கள் அன்பின் நினைவுகள்
ஒவ்வொரு நிமிடமும் உங்கள் அன்பின் முகம் என் முன்னே
வழிநடத்தி செல்கின்றது
எம் காலம் உள்ளவரை உங்கள்
பாதக்கமலங்களில் மலர் தூவி வணங்கின்றோம் உங்கள் ஆத்மா
சிவபதமடைய என்றென்றும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஆண்டு பல ஆனாலும் நீங்கா உங்கள்
நினைவுடன் வாழும்
உங்கள் பாசமிகு மனைவி
வேதாதுரை மற்றும் உற்றார் உறவினர்
ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றௌம்