

திதி: 28-11-2021
யாழ். கோப்பாய் தெற்கு வீரபத்திரர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசுப்பிரமணியம் சரோயினிதேவி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரியே!
என்னுடன் பிறந்தவளே
என்னருமைச் சகோதரியே!
உன்னைத் தேடி என் கண்கள் களைத்ததம்மா...
அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரியே...!
உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எம் உடன்பிறப்பே...
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு சகோதரியாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம்!!
உங்கள் வாழ்வுதனை வர்ணிக்க
வார்த்தைகள் தேடியே தவிக்கின்றோம்..
இன்று நீங்கள் இல்லாத இவ்வுலகில் வாழ்வதற்கு
என்ன பாவம் செய்தோம் உடன்பிறப்பே...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
அன்னாரின் முதலாம் ஆண்டு ஆத்மசாந்தி பிரார்த்தனை எதிர்வரும் 28.11.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் 11.00 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்களும் வருகை தந்து அமரரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.