1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் திருமலர்
1949 -
2020
அல்வாய் திக்கம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அல்வாய் மேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசுப்பிரமணியம் திருமலர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்தபோது கண்முன்னே
அம்மாவின் பாசநினைவுகள் தான்!
தாங்கிப் பிடிக்கின்றன மனதை!
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கண்களை மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகிறேன்
இனிய தாயாக இல்லறத்தில்
வாழ்ந்தீர்கள் அம்மா!
ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
வந்து மறைந்தாலும் ஒற்றைச் சூரியனாய்
பிரகாசித்தீர்கள் அம்மா!
ஆண்டு ஒன்று சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்!
ஆறாத்துயிலில் கலந்திருக்கும்
உங்கள் பாதங்களில்
கண்ணீர்த் துளிகளாலே ஆராதனைகள்!
உங்களின் ஆத்மா சாந்தியடைய
நெஞ்சுருகி வேண்டியபடியே....
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்