யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசுப்பிரமணியம் நகுலராஜன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 26-07-2026
அன்புத் தெய்வமே ஆறாத்துயரில்
துடிக்கின்றோமே எம்மை அழவிட்டு
நீங்கள் சென்று ஆண்டு ஒன்று ஆனதுவோ!
நீண்டு செல்லும் நாட்களிலே
நிழல் வடிவில் தெரிகின்றீர்கள்
ஆண்டு பல சென்றாலும் அகலாது
எமக்குள்ளே தெய்வமாக வாழ்கின்றீர்கள்!
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எங்கள் குலவிளக்கே!
அனுதினமும் தெரிகின்ற எம்
குடும்பத் தெய்வமானவரே
மாண்டவர்களோடு நீங்கள்
விண்ணுலகில் வாழ்ந்தாலும்
மனதாலும் நினைவாலும் தினம்!
தினம்! துடிக்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...
திரு. இ. பாலசுப்பிரமணியம் நகுலராயன் (காவி) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு திதி கிரியைகள் எதிர்வரும் 26.07.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து முற்பகல் 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், மதியபோசன நிகழ்விலும் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்வு நடைபெறும் இடம் (மண்டபம்):
Industriestrasse 34, 8152 Glattbrugg
நாள்: 26-07-2026 (ஞாயிற்றுக்கிழமை)
தொடர்புகளுக்கு
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
We miss you Mama from London R.Sayan family
எங்கள் மனதில் என்றும் ஒளியாய் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.