

அஞ்சலி பாலசுப்பிரமணியம் (கமல்) நகுலராஜன் ZH புங்கை நான்கில் பூத்திட்ட புண்ணியன் கங்கையாய் நட்பை பகிர்ந்திடும் பண்பாளன் எங்கு கண்டாலும் இனிப்பான பேச்சாளன் மங்காத புன்னகை உதிர்த்து மனம் வெல்லும் உத்தமன்! மண்பற்றில் தோழ்நிற்கும் மா மனிதன் கண்போல உறவைக் காத்திடும் காப்பாளன் விண்ணேகும் வயதா இவன் போன்றோர்கு பண்பான தோழனே உனையினி எங்கு காண்போமோ? மானுடப் பிறப்பில் மரணம் நிச்சயம் ஊனுடம்பதை உகுக்கும் காலமிதில்லை நேரமதை நிறுத்த யாராலே முடியும் காலனே நீ என்செய்வாய் உன் வேலையது! கமல் தங்களுக்கு எமது அஞ்சலியும், உமை இழந்து வாடும் உமது குடும்பத்தாருக்கு இரங்கலையும் தெரிவித்து கொள்கிறது சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிமும் ஊரவரும்! ஓம் சாந்தி! சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்.
