

அமரர் பாலசிங்கம் சுப்பையா
1948 -
2024
கொழும்புத்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
முதல் முதலாக லாறி ஓட்டுனராகவே கண்டேன். மிரண்டேன். முறுக்கு மீசையும் உயர்ந்த தோற்றமுமே லாறி ஓட்டுநருக்கான சாயலோ என வியந்ததும் உண்டு.
கண்டு பயந்த உருவமே எனது அக்காவின் மகளின் கணவனாக இணைந்தபோது நான்
சிறுவன். நெருங்கவும் அஞ்சினேன்.
பின்பு நெருங்க நெருங்க அஞ்சிய தோற்றத்திற்கும், இவரின் மன ஆழத்தில் உள்ளுறைந்து கிளம்பிய அன்பின் நெருக்கத்திற்கும் எவ்வித பொருத்தமும் இல்லை என்பதை.
சிறுவனாக முதலில் பார்த்துப் பயந்த உருவம் இன்று கண்கலங்க வைத்துச் சென்றுவிட்டதே
பாலசிங்கண்ணனின் பிரிவால் துயருறும் அனைத்து உறவினருக்கும் எனது குடும்பத்தின் சார்பான ஆழ்ந்த அனுதாபங்கள்
நாதன் பிரான்ஸ்
Write Tribute
ஊரில் எமது அயலார் . யெர்மனியில் சந்திக்க முடியவில்லை , அது இன்னும் வேதனையை தருகின்றது. அன்னாரின் குடும்பதினருக்கு ,எமது குடும்பம் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம்...