திதி: 20-01-2024
யாழ். வண்ணார்பண்ணை B.A தம்பி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Berg (Tg), Neuendorf (So) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் சத்தியேந்திரா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலம் எல்லாம் என்னை
வாழவைத்த கணவாளனே
காலன் அவன் பார்வையில் சென்றதேனோ
என்னை தவிக்க விட்டு?
வரமென என் வாழ்வில் வந்த தவமே
காலன் உன்னைக் காவுகொண்டு ஆண்டு
ஐந்து ஆனதுவோ நம்ப முடியவில்லை
உங்கள் நினைவால் நாம்
நாளும் தவிக்கின்றோம் - உயிரே!
நாம் சேர்ந்து சிரித்த நாட்களை
எண்ணி அழுகிறோம்
சேர்ந்து கதைக்கவும் முடியாது என்பதால்
கல்லறை வரை மறையாத
களங்கமற்ற பாசம் காலவதியாகி
ஓராயிரம் ஆண்டு சென்றாலும்
இழக்க முடியாத நேசம்!
நெஞ்சம் நெகிழ வைக்கும் அன்பு!
ஆண்டு ஐந்து ஆனாலும் உயிரை உலுக்கி
நடுங்க வைத்த பிரிவு!
நாம் மறைந்தாலும் அழியாத நீங்கள்
நடந்த தெய்வீகப் பயணம்
உறைந்து போன பௌர்ணமியில் உதிராமல்
மலர்ந்தே இருக்கும்
எம் மனத்திரையில் என்றும்!
கடந்துவிட்ட வருடங்களில்
கலங்காத நாட்களில்லை
நீங்கள் இருக்கும் போது
ஆனந்தக் கண்ணீர் தந்த விழிகள்
இப்பொழுது தூக்கம் தொலைத்து
கண்ணீர் வடிக்குதையா
ஐந்து வருடம் விரைந்தே போனதப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம்-ஆனாலும்
உங்கள் முகம் பார்க்க துடிக்கும் வேளையில்
நெஞ்சில் இரத்தம் சுண்டுதப்பா
வீசும் காற்றினிலும், நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம் நினைவால் வாடுகிறோம் அப்பா!
உம் இழப்பை ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா எம் அன்பு அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்…
Rest In Peace Anna