
சுவிஸ் Lausanne ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் நிதர்சன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலையில் கதிரவன் கண்விழிக்க
காத்திருந்த காலனவன்
உன் உயிர் கவர
சாவு என்ற சதிகாரர் விரித்த
வலையினிலே எங்கள் சந்தோசம்
அனைத்தும் சமாதி ஆனது மகனே
நீ எம்மை விட்டுப்பிரிந்த
அந்தக்கொடிய நாளை மறக்க முடியுமா?
காலம் காலமாய் ஒன்றாய் வாழ்வோம்
என்றெண்ணி கூட்டுப் பறவைகளாய்
சிறகடித்துப் பறக்கையிலே
மாயவனின் சதி எனும் மாயவலையில்
உமது உயிர் பறிக்கப்பட்டது ஏனோ?
நீ இல்லையெனும் நினைவே
நெஞ்சுருக்கிக் கொல்லுதய்யா கண்களில்
திரண்டிடும் நீர் கரைத்திடுமோ காயத்தை
நீங்காத உன் நினைவுகள் எமை வந்து வாட்டுது
கண் நிறைந்த உனது தோற்றம்
கனவில் வந்து வருத்துகிறதே இன்முகம் காட்டி
எம் இல்லம் சுற்றிய நாட்களை
எப்படி மறப்போமடா!
அருகினிலே இனிமையாய் நிஜமாய்
கண் உன் உருவத்தை
நிழற்படமாய் பார்க்கும்போது நெஞ்சம்
விம்மி அழுகின்றதே மகனே
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன
பலநூறு உறவுகள் இருந்தென்ன
நீ பிரித்த இடைவெளியை மகனே
யார்தான் நிரப்புவாரோ
கடலின் ஆழத்தை கூடக் கண்டு விடலாம்- ஆனால்
நாம் உன்மேல் கொண்ட அன்பினை
அளந்திட முடியுமா?
காலங்கள் பல கடந்தும் கண்ணீருடன்
கண்கள் உன் நினைவுடன்.
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்- எங்கள்
உள்ளங்களில் நீங்காமல் நிறைந்திருப்பாய் மகனே
நீ மறைந்த நாள் முதலாய் நினைவிழந்து வாழும்
உனது உறவுகளின் கண்ணீர்த்துளிகள்.
உன் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்
வையகம் உள்ளவரை உன் நினைவுகள் நீளும்
நீர்வேலி தெற்கு, லவுசான் சுவிஸ்
உன் பிரிவால் வாழும் அப்பா, அம்மா,
உற்றார் உறவினர்கள், நண்பர்கள்