2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வசாவிளான் திக்கம்புரையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் முருகேஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
வட்டமுகமும் அழகிய புன்சிரிப்பும்
எங்கே போனதோஒரு நிமிடம் உம் விழிதிறந்து
எங்கள் சோகம் நீங்கிவிடும்
எங்கள் வீட்டு நிலவாக
ஒளி வீசி மகிழ வைத்தீரே
யார் கண்பட்டு மறைந்து போனீரோ
தாமரை மலர் நீரில் ஆடுவதுப்
போல நாங்கள் உமைப்பிரிந்து
தத்தளித்து மனம் ஆடுகின்றதே
தென்றல் வரும் திசையினையும் அறிவோம்
மல்லிகையின் வாசனையையும் உணர்வோம்
உமது அன்பு பொழியும் முகப்பாவனையையும் புரிவோம்
ஆனால் உமது பிரிவின் நிமிடத்தினை அறியோமே
ஆண்டு இரண்டென்ன எத்தனை
ஆண்டுகள் கடந்தாலும்
உமது அரவணைக்கும் வாசனைக்
கரங்கள் எம்மோடே தவழும்
தகவல்:
குடும்பத்தினர்