5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 JAN 1949
இறப்பு 07 MAY 2017
அமரர் பாலசிங்கம் ஞானவேல் (அப்பன்)
பிரபல வர்த்தகர் - TNG Brothers, கதிரேசன் வீதி, கொழும்பு-13
வயது 68
அமரர் பாலசிங்கம் ஞானவேல் 1949 - 2017 சரவணை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு கிழக்கு மடத்துவளி 8ம் வட்டாரம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் ஞானவேல் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

வருடங்கள் ஐந்து கடந்ததுவோ
நம்பவே முடியவில்லையே-தாயுமானவரே
நேற்றுப்போல் இருக்குதைய்யா
உங்களிடம் நாம் கழித்திட்ட பொழுதுகள்! 

ஆணிவேராய் எம்மைக்
காத்து நின்ற எங்கள் தெய்வமே
விழுதுகள் நாம் விம்முகின்றோம்
ஆண்டு ஐந்தாகியும் ஆறவில்லை எம்மனம்
விழிகளில் கண்ணீர் காயவில்லை

உதிர்ந்து நீங்கள் போனாலும்
உருக்கும் உங்கள் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும் அப்பா!

எம் வாழ்வில் நீங்கள் இல்லை
என்ற எண்ணம் எமக்கில்லை
வாழ்வீர் எம்மனதில்
நாம் வாழும் காலம்வரை!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கும்!
மனைவி கேதாரகெளரி மற்றும் குடும்பத்தினர்....

தகவல்: குடும்பத்தினர்