1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
35
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பருத்தித்துறை கற்கோவளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Gonesse ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை புஸ்பலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆகிவிட்டது.
நீங்கள் விட்டுச் சென்ற இடத்தை உங்கள் நினைவுகள் நிரப்புகின்றன.
நல்லறம் செய்த உங்கள் இல்லறம் எங்களை எந்நாளும் வழிநடத்தும்.
அன்புக்கணவராய், ஆசை அப்பாவாய், செல்லத் தாத்தாவாய்,
அருமை மாமாவாய், அண்ணாவாய், பெரியப்பாவாய், சித்தப்பாவாய், மைத்துனராய், சகலனாய், புஸ்பலிங்கண்ணாவாய், நண்பராய், இதையெல்லாம் விட நல்ல மனிதராய் எல்லோர் மனதிலும் அன்பால் நிறைந்த உங்கள் ஆத்மா ஆண்டவன் அருட்பாதங்களில் இளைப்பாறிட
எந்நாளும் வேண்டும் உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மருமக்கள், பெறாமக்கள் உறவினர் மற்றும் நண்பர்கள்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்