சிரித்த முகம் எங்கே சிந்தித்த அகம் எங்கே சினக்காத குணம் எங்கே சீராட்டி மகிழ்ந்த உறவே அம்மா நீங்கள் எங்கே தேசம் உலாவிய கால்கள் எங்கே நேசம் குலாவிய கரங்கள் எங்கே பாசம் காட்டிய இதயம் எங்கே வழிகாட்டிய விரல்கள் எங்கே அறிவுரை கூறிய அனுபவம் எங்கே ஆசியுரைத்த வார்த்தைகள் எங்கே இரும்பைப் போன்ற தைரியம் எங்கே கரும்பை போன்ற உள்ளம் எங்கே படித்த நெறி தவறாது பக்தி முறை தவறாது பழிகள் வீண் கூறாது பரமன் வகுத்த வழி தவறாது பாரினில் வாழ்ந்தவரே பிள்ளைகள் உயர ஏணியாய் அல்லலுறும் வேளையில் தோணியாய் அனுபவ மொழிகளில் ஞானியாய் அன்பைப் பொழிவதில்த் தேனீயாய் அகவை எண்பதைக் கடந்தும் அதி நிறைவாய் வாழ்ந்து அந்தியில் ஆதவனாய் அந்திமத்தில் மறைந்த எங்கள் அன்புத்தோழி ஆனந்தியின் அம்மாவே உங்களை இழந்து எங்கள் ஆனந்தி அன்பு அக்கா நிர்மலா அண்ணா சிவா எல்லோரும் தவியாய்த் தவிக்கிறார்கள் அம்மா , பூவுலகை வென்று வாருங்கள் சந்திரன் அண்ணாவையும் அழைத்து வாருங்கள் மீண்டும் உங்கள் பிள்ளைகள் உறவினர்கள் அயலவர்களுடன் கூடி ஒரு வாழ்வு வாழ்ந்திடலாம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி. அம்மாவின் ஆத்மா பறாளாய் விநாயகர் முருகன் பாதங்களில் சாந்தி பெறப் பிரார்த்திக்கிறேன் சிவரஞ்சன் (பிரான்ஸ்)
மாமி உங்கள் மரணசெய்தி கேட்டு மனம் உடைந்து போனோம். என்னை அன்போடு அரவணைத்தீர்கள்்இனி எப்போ காண்போம்? உங்கள் இறுதி யாத்திரைக்கு வரமுடியாமல் தவிக்கிறோம். உங்கள் ஆத்மா சாந்தியடைய உங்கள் மகனும் நானும்...