

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆசீர்வாதம் மரியம்மா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
"நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்
நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்" - உபாகமம் (26:6)
அன்புள்ள அம்மா!
உங்களை நினைக்கும் போது வரும் கண்ணீரை
நாங்கள் துடைத்தாளும்
எங்கள் இதயத்தின் வலி நிரந்தரமானது...
அன்பும் பண்பும் அரவணைப்பும்
நிறைந்த எங்கள் அன்பு அம்மா
ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டதம்மா
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண!
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா
எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை ஐந்து அல்லபல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..