யாழ். உத்தரிய மாதா கோவிலடி, வயாவிளான் வடமூலையைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆசீர்வாதம் யேசு மரியதாசன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
“உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன் அப்போது
நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்”
(யோவான் 14:3)
இரண்டு ஆண்டுகள் ஓடி
மறைந்தாலும் உங்கள்
நினைவுகள் எங்கள் மனதில்
என்றொன்றும் நிறைந்திருக்கும்
காலங்கள் விடை பெறலாம்
ஆனாலும் கண் முன்னே
நிழலாடும் உங்கள் நினைவுகள்
ஒரு போதும் எங்களை விட்டு அகலாது
நீங்கள் வாழ்ந்த இவ்வுலகில்
எமை வாழவைக்க ஓயாதுழைத்து
இப்போ ஓய்வெடுத்துக் கொண்டீர்களே
நீங்கள் விட்டுப் போன வெற்றிடத்தில்
எதை இட்டு நிரப்புவோம்
கல்லறைப் பூக்களோடு எங்கள்
கண்ணீரும் பூத்துக்கிடக்கிறது.எம்
நெஞ்சுக்குள் வாழும் உங்கள்
நினைவுகள் எப்போதும் கலைந்துபோகாது
என்றும் உங்கள் பிரிவால் துயருற்று வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், சகோதரிகள்,
உற்றார், உறவினர்கள்.
We miss you so much but will never forget your memory. You will always be remembered fondly.