யாழ். உத்தரிய மாதா கோவிலடி, வயாவிளான் வடமூலையைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆசீர்வாதம் யேசு மரியதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
“நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்
என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்”
(யோவான் 11:25)
ஆண்டுகள் கடக்கிறது ஆனால்-நாட்கள்
போல் தெரிகின்றது உம் நினைவு
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் உம் உறவுக்கு
நிகரில்லை யாருமே
உங்கள் நினைவுகள் அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை
அப்பா... அப்பா........
மறைந்திட்டாயோ என்று நினைத்திட எங்கள்
விழிகள் நித்தம் கண்ணீரால் நனைகின்றது
கட்டிடங்கள் காலத்தால் சிதைந்து போகும்!
காசு பணம் வாழ்நாளில் கரைந்தே போகும்!
நல்லவையும் சில நேரம் வாழ்வில் தாழ்ந்து போகும்!
ஆனால் உன் ஞாபகங்கள் எந்நாளும் எம் நெஞ்சில் வாழும்
ஆயிரம் ஆண்டானாலும் அழியா உம் நினைவுகளும்
உம் அன்பும், பாசத்தொடரும் எம்மை விட்டுபிரியாது
அப்பா....... அப்பா........
வற்றாத உங்கள் நினைவுடன்
மனம் உருகி கலங்கி நிற்கின்றோம்
உங்கள் ஆன்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்
என்றும் உங்கள் பிரிவால் துயருற்று வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், சகோதரிகள்,
உற்றார், உறவினர்கள்.
We miss you so much but will never forget your memory. You will always be remembered fondly.