Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 08 MAY 1950
கர்த்தருக்குள் 23 MAY 2019
அமரர் ஆசீர்வாதம் யேசு மரியதாசன்
வயது 69
அமரர் ஆசீர்வாதம் யேசு மரியதாசன் 1950 - 2019 வயாவிளான், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். உத்தரிய மாதா கோவிலடி, வயாவிளான் வடமூலையைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை  வதிவிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம் யேசு மரியதாசன் அவர்கள் 23-05-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.  

அன்னார், காலஞ்சென்ற ஆசீர்வாதம், சீவரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

றூபி திரேசா அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரான்லி ஜோய், நெல்சன் றோய் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுபிற்ரா ஜோய், அனுஷா றோய் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மேரி திரேசா மரியநாதர்(வவுனியா), மரியராணி மரியஞானேந்திரன்(யாழ்ப்பாணம்),  மேரி யசிந்தா யோசெப் நவரட்ணம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,  

றோஜன், டானியல், றோய்ஜிற் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 அன்னாரின் பூதவுடல் 24-05-2019 மற்றும் 25-05-2019 ஆகிய திகதிகளில்  Sala Del Commiato Camera Mortuaria Cimitero Di Rubiera மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் Chiesa Di Rubiera தேவாலயத்தில் 25-05-2019 சனிக்கிழமை அன்று பி.ப 3.00 மணிக்கு இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்