Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 AUG 1956
இறப்பு 06 MAR 2025
அமரர் அருந்தவநாயகி கந்தசாமி
வயது 68
அமரர் அருந்தவநாயகி கந்தசாமி 1956 - 2025 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வடமராட்சி கரவெட்டி கிழக்கு செட்டிய தெருவைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட அருந்தவநாயகி கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டாயிரம் சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் –நெஞ்சில்
நீராக நின்றெரியுதம்மா!

பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்!

உங்களை உருக்கி எங்களை
உருவாக்கிய உன்னதமே!
உயர்வான வாழ்வுதனை எமக்கு
உளமார அமைத்திட்டீர்கள்!
உங்களை வாழவைக்கும் காலம் இனி
என நாம் மகிழ்வுற்று இருக்கையிலே
காலனவன் செய்த சதி இதுவோ?

அம்மா நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..  

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos