யாழ். வடமராட்சி கரவெட்டி கிழக்கு செட்டிய தெருவைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட அருந்தவநாயகி கந்தசாமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அமரத்துவ அன்னை அருந்தவநாயகி கந்தசாமியின்
31ம் நாள் நினைவஞ்சலி
முப்பத்தொரு தினங்கள் உன்னுயிர் பிரிஞ்சு முழுசாய் கழிஞ்சாச்சு
எப்பக்கமும் உன்நினைவுகள்
சுழன்றெம்மைக் கனன்றாச்சு
பூவுலக பந்தங்கள் உனை விட்டுக் கடந்தாச்சு
தேவுலக சொந்தங்கள் உன்னான்மா
கலந்தாச்சு
கனவுகள் பொடிபட உன் உருவமும்
அசைபட எம் விழிகளும் ஆறாக ஓட!
நினைவுகள் நசிபட நெஞ்சமும் உடைபட
எம் மனசெங்கும் சோகமே பாட!
சித்தமும் சிதைபட உதிரமும் உறைபட
ஊனுயிர் எமக்கிங்கு வாட!
நித்தமும் வதைபட நாம் கவலையில் அலைபட
ஏன் எமைப்
பிரிந்தாய் மாதா?
நெஞ்சம் நிறைய பெரும் கனவுடன் வாழ்ந்தாயே!
கொஞ்சமும் இரங்காமல் காலனும் கொய்தான் உனையே!
பஞ்சுபோல் உன்னுடல் சாம்பலாய் எரித்து வஞ்சினம் தீர்த்ததோ தீயே!
கெஞ்சியே அழுதாலும் திரும்பியே வருவாயா எம் தாயாய் நீயே?
ஆருயிர்த் தாயே அன்புத் திருவுருவத்
தேவதையே!
கருசுமந்து எமக்கு உருதந்து அருவமாகிய அன்னையே!
குடும்பத்தை உன் கையிலேந்திக் காவல் காத்த உத்தமியே
கடும்துயரை களைந்தெடுத்து கணவருக்கு அருந்துணையாய் அமைந்த அருந்தவநாயகியே
உன்வடிவம் பளிங்குபோல் எம் மனதில் நிலைக்கும்
கண்கவரும் நட்சத்திரமாய் உன்
உருவம் வானத்தில் ஜொலிக்கும்
நண்பர்களும் உறவுகளும் உனை எண்ணி மனம் கலங்கும்
அன்பர்கள் உள்ளமதில் என்றும்
மறையாமல் உன் முகமும் துலங்கும்
பக்கத்தில் நீயில்லாப் பகற்பொழுதும்
எமக்கு இருட்டாச்சு
வெப்பத்தில் எம் மனசும் அவிந்து
வெந்து நொந்தாச்சு
விருப்பத்தில் சாயிபாபாவும் உனை மேலே அழைச்சாச்சு
சொர்க்கத்தில் உனக்கும் இடம் இன்றைக்கே கிடைச்சாச்சு!
உன் பிரிவால் வருந்தும்
நின் நினைவைத்
தினமும் அருந்தும்
உன் உருவத்தை
மனதில் பதித்திருக்கும்
உனதன்புக் குடும்பத்தார்.
ஓம் சாந்தி சாந்தி...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Very sorry for your loss, My deepest sympathies to your family, during this difficult time.