1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அருணாசலம் உமாபதி
முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்- இலங்கை
வயது 68
Tribute
79
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை மூளாய்வீதி, இங்கிலாந்து லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருணாசலம் உமாபதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...
ஓராண்டு காலம்தான் போனாலுமே
பல்லாண்டு காலங்கள்தான் வந்தாலுமே
ஆறாததே உங்களைப்பிரிந்த மனத்துயரமே !
அன்பு, அறிவு, கருணைக்கடல் வெள்ளம்
அன்னைபோல அரவணைக்கும் அருமையான உள்ளம்
இன்பத்திலும் துன்பத்திலும் ஓடிவந்து உதவும் அன்புக்கரங்கள்
மன்னிக்கும் மனமும் சிரித்த முகமும் உமது சிறந்த குணங்கள்!
உழைப்பை உரமாக்கி பாசமாய் பணிவிடைகள்
பல செய்து வாழ்க்கை எனும் பாடத்தை
எமக்கு கற்றுத் தந்த எமது உயிர் தந்தையே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்