3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 03 DEC 1942
மறைவு 20 MAY 2019
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
ஊடகரும், எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளர்- உதயன் பத்திரிக்கை மொழிபெயர்ப்பாளர்
வயது 76
அமரர் அருணாசலம் முத்துலிங்கம் 1942 - 2019 காரைநகர் மாப்பாணவூரி, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகர் மாப்பாணவூரியைப் பிறப்பிடமாகவும், இராசாவின் தோட்டத்தை வதிவிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அருணாசலம் முத்துலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.   

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
 மூன்று ஆண்டு ஆன போதும்
 உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல்
 தவிக்கின்றோம்-அப்பா
 கண்முன்னே நீங்கள் வாழ்ந்த
காலம் கனவாகிப் போனதுவோ!

அப்பா எமை ஒரு நிமிடமும்
 காணாவிட்டால் துடித்து பதை
 பதைத்த நினைவுகளை இன்னும்
 கண்ணீர் விழி நனைக்குதப்பா!

எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
 பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
 எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்-அப்பா
 மாறாது ஒருபோதும் உம் கொள்கை
நம் வாழ்வில் என்றும் மறையாது
 உங்கள் நினைவு எம்
 மனதை விட்டு அப்பா!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
 பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்