யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அருணாசலம் அருந்தவராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்து ஆண்டுகள் ஓடி விடலாம் இனிவரும்
காலங்களும் மறைந்து விடலாம்- ஆனால்
பாசத்தின் பிறப்பிடமாகவும்
அன்பின் ஊற்றாகவும் எங்கள் வாழ்வில்
உங்கள் நினைவில் வாழ்கின்றோம் மனக்கனத்தோடு
இதயத்தில் அன்வு கொண்ட நீங்கள்
என்றென்றும் இருப்பாதகவே உணர்கின்றோம்!
எல்லா இதயங்களும் இன்றும் அழுகின்றன!
ஏனோ இறைவன் இடைநடுவில் பறிந்துவிட்டான்
அதனால் ஏங்குகின்றோம் தினமும்
குடும்ப விருட்சத்திற்கு நீராகி வேராகி நின்று நிழல் பரப்பி
அடைக்கலம் தந்து வாழ்வாங்கு வாழவைத்த தெய்வமே!
குடும்ப ஒளிவிளக்கே! எங்கே சென்றாய்?
எண்ணிய பொழுதெல்லாம் கண்ணில் நீர்கசிகிறதே
உணர்வால் உள்ளதால் எம்மோடு வாழும் தெய்வமாகி
ஒளியாகி எமக்கெல்லாம் வழியாகி எம் இதயங்களில் வாழ்கின்றீர்
ஆத்ம சாந்திக்காக ஆண்டவை பிரார்த்திக்கின்றோம்
என்றும் உங்கள் நிழலாடும் நினைவுகலில் வாழும்
மனைவி, பிள்ளைகள்